×

சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்: ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை

 

அறந்தாங்கி,நவ.17: அறந்தாங்கி அரசு பணிமணையில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி உள்ளது. இந்நிலையில் அறந்தாங்கி அரசு பணிமனையில் இருந்து திருசெந்தூர், திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திகை மாதம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கீரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம் இப்படி ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதம் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார் வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர்.

இதனால் பொருளாத சிலவு அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் எளிய மக்கள் பயன்படும் விதமாக கார் வேன் பிடித்து செல்ல முடியாத ஐயப்ப பக்தர்களுக்கு அறந்தாங்கி அரசு பணிமனையில் இருந்து கார்த்திகை மாதம் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்: ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Ayyappa ,Arantangi ,Sabarimalai Ayyappan Temple ,Dinakaran ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...